search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா சிறை"

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
    • இந்தோனேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மற்ற 3 - மீனவர்களையும் சிறையில் இருந்து மீட்டு உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:


    தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


    கன்னியாகுமரி மாவ ட்டம், கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜெசிந்தாஸ் (33)-க்கு சொந்தமான விசைப்படகில், இவரும் தூத்தூர் மற்றும் கேரளாவை சேர்ந்த 7 - மீனவர்களும் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படையினரால் மீன வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 4 பேரை கடந்த மாதம் 28-ந்தேதி அந்த நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. படகின் உரிமையாளர் மரிய ஜெசிந்தாஸ் உட்பட 4 -பேரும் இந்தோனேசியா சிறையில் இருந்து வந்தனர்.


    இந்நிலையில் கடந்த 10 -ம் தேதி மரிய ஜெசிந்தாஸ்க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையில் மயங்கி விழுந்தார். உடனே அங்குள்ள காவலர்கள் மீனவர் சுயநினைவு இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 20-ந்தேதி உயிரிழந்தார்.

    இதனால் இவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.எனவே இந்தோனேசியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உயிரிழந்த மரிய ஜெசின் தாஸ் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் இந்தோனேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மற்ற 3 - மீனவர்களையும் சிறையில் இருந்து மீட்டு உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    கோரிக்கை மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தோனேசியா நாட்டின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களில் 36 கைதிகளை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர். #Indonesiajail #jailinmatesrun
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டின் அசே மாகாணத்தில் உள்ள பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி மாலை 113 கைதிகள் தப்பியோடி விட்டனர்.

    இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 726 கைதிகள் கூட்டுத் தொழுகைக்காக திறந்து விடப்பட்டபோது, இந்த சந்தர்பத்தை சாதகமாக்கி, சிறையின் கம்பி வேலியை வெட்டி அவர்கள் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


    தப்பியோடிய கைதிகள் பிடிப்பதற்காக நாடு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தப்பிச்சென்ற கைதிகளில்  இதுவரை 36 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என அசே மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் எரி அப்ரியோனோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  #Indonesiajail #jailinmatesrun
    ×